Power Star
                 Dr.Srinivasan Official Site

Home » » நான் தான் அடுத்த எம்.ஜி.ஆர்.,! கோச்சடையான் தான் எனக்கு போட்டி : பவர் ஸ்டார் ஆருடம்...!

நான் தான் அடுத்த எம்.ஜி.ஆர்.,! கோச்சடையான் தான் எனக்கு போட்டி : பவர் ஸ்டார் ஆருடம்...!

Written By brahma on Thursday, 31 May 2012 | 04:40

மிழ் சினிமாவில் அவ்வப்போது ஒருவர் எப்படியாவது பிரபலமாகி விடுவர். அந்த வகையில் எடுப்பான பல்லும், துடிப்பான முகமும், தடிப்பான உருவமும், கருப்பு கண்ணாடியில், வெள்ளை உடையில் அவர் தலையை கோதி விடும் ஸ்டைலும், கமல் முதல் கவர்னர் சந்திப்பு வரை, பவர் ஸ்டார் என்ற பட்டதோடு உலா வரும் டாக்டர்.சீனிவாசனின் சிறப்பு பேட்டி உங்களுக்காக. இதோ அவரே பேசுகிறார் கேளுங்கள்...
மதுரையில் சிம்மக்கல்லில் 10 வருடங்களாக அக்குபஞ்சர் மருத்துவம் பார்த்து வந்த என்னை நோயாளியாக வந்த ஒருவர், நீங்கள் சினிமாவில் நடித்தால் சூப்பரா இருக்கும் என்று உசுபேத்தி விட நானும் கிளம்பி கோடம்பாக்கம் வந்தேன். வந்த சில நாட்களிலேயே லத்திகா என்ற கதையை ரெடி பண்ணி, நானே இயக்கி நடித்தேன். படமும் சூப்பரா 225 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அடுத்து கொஞ்ச இடைவெளியில் ஆனந்த தொல்லை படம் வெளியாக உள்ளது. இந்தபடத்தில் வில்லனாக நடிக்கிறேன். எனக்கு ஜோடியா வாணி விஸ்வநாத் நடிக்கிறாங்க. 
என்னை பொறுத்த வரை ஏனோ தானோ என்று படம் பண்ண விருப்பம் இல்லை. நல்ல கதை தான் ரொம்ப முக்கியம். இந்த படத்தை அடுத்து தேசிய நெடுஞ்சாலை என்ற படத்தில் நடிக்கிறேன். இதில் சங்கவி தான் என் ஜோடி. படத்தை நானே இயக்கி நடிக்கிறேன். இதற்கு அடுத்து படைத்தலைவன். இந்தபடம் ஒரு போலீஸ் ஸ்டோரி. மாரி மைந்தன் இப்படத்தை இயகுகிறார். கே.எஸ்.ரவிக்குமார் சார் படத்தில் நடிக்க ஆசை உள்ளது. அதை விட ரொம்ப முக்கியம் சங்கவி மாதிரி ஒரு ஆர்ட்டிஸ்ட் கிடைத்தால் மன்மத ராசா பாட்டு மாதிரி, என்னாலையும் ஆட முடியும். இதற்காக இப்போ பரதம் உள்ளிட்ட நடனம் எல்லாம் கத்துக்குகிட இருக்கேன். 
சினிமா மட்டும் இல்ல, சொந்தமா பிசினஸ் இருக்கு, கிளினிக்கு இருக்கு, அதை தவிர எனக்கு கல்லூரி மாணவர்கள் ரசிகர்கள் அதிகம். அவங்க கல்சூரல் விழாக்களுக்கு நான் கலந்துகிட சொல்லி வர்புறுத்துராங்க. நானும் போய் ‌ஜாலியா இருந்துட்டு வரேன். தமிழ் சினிமாவில் நல்ல கதை உள்ள படங்கள் பண்ணி மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்க விரும்புகிறேன். எனக்கு பெண் ரசிகர்கள் ரொம்ப இருக்காங்க. பவர் ஸ்டார் படத்தில் நல்ல கதை இருக்கும் என்று நிறைய பேர் படம் பார்க்க வர்றாங்க. அப்ப நீங்க தான் அடுத்த எம்.ஜி.ஆரா என்று கேட்காதீங்க. நான் அப்படி சொல்ல வரவில்லை. அவருக்கு அடுத்து நான் தான் வருவேன். இன்னும் ரசிகைகள் மனதில் இடம் பிடிப்பேன். அப்படின்னா உங்களுக்கு அரசியல் ஆசை இருக்குமோன்னு தோணும், சொன்ன நம்பமாட்டீங்க, எனக்கு ரசிகர் மன்றம் வைக்க கேட்டு ரசிகர்கள் ‌தொல்லை பண்றாங்க. ஆனால் நான் தான் இப்போதைக்கு மன்றம் எல்லாம் வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். என்னால் முடிஞ்ச வரைக்கும் நல்லது பண்ணிகிட்டு இருக்கேன்.
இந்த சினிமாவிற்குள் நான் வந்தது ரொம்ப பெரிய விஷயம். பொது இடங்களில் என்னை பார்த்தால் உடனே பவர் ஸ்டார்ன்னு எல்லோரும் ஓடி வராங்க. லத்திகா படத்தில் நடிச்ச காட்சியை சொல்லி நடிச்சு காட்ட சொல்றாங்க. அந்தளவிற்கு மக்கள்கிட்ட நான் ரீச் ஆகியிருக்கேன். எனக்கு கூட ஒரு சமயம் பாரதிராஜா சார் படத்தில் நடிக்க வேண்டும் என்று தோணுச்சு, அப்புறம்தான் அவர்கிட்ட போய் வாய்ப்பு கேட்டு நிக்குறது பதிலா நாமலே படம் டைரக்ட் செய்யலாம் என்று முடிவு பண்ணி, படம் இயக்க தொடங்கினேன். இப்பகூட தினமும் பத்து கதைகள் கேட்கிறேன், ஆனால் எனக்கு செட் ஆனா மட்டும் தான் அந்த கதையில் நடிக்க ஒப்புக்கொள்கிறேன். 

இப்போதைக்கு என் படங்கள் எல்லாம் நல்லா வந்துட்டு இருக்கு. பவர்ஸ்டாரின் படத்துக்கு ஒரே போட்டி படம் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான் படம் தான். சென்னையில் மட்டும் எனக்கு 5லட்சம் ரசிகர்கள் இருக்காங்க. இதுமாதிரி பல ஊர்களிலும் எனக்கு ரசிகர்கள் இருக்காங்க. என்னுடைய பலமே என் ரசிகர்கள் தான். தொடர்ந்து நல்ல கதையம்சம், நல்ல கருத்துள்ள படங்களை பண்ணுவேன் என்று சொல்லி முடித்த பவர்ஸ்டார் சீனிவாசன், சமீபத்தில் கமல்ஹாசனுடன் எடுத்துக்கொண்ட போட்டோவையும், கவர்னருடனும் எடுத்து கொண்ட போட்டோவையும் என்னால் மறக்க முடியாது என்று சொல்லி முடித்தார்.
ஆக தமிழ் சினிமாவில் இனி பவர் ஸ்டாரின் படங்கள் எல்லாம் லத்திகா மாதிரி 200, 300 நாட்கள் ஓட வாய்பிருக்கு என்று சொல்லி வைப்போம்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Copyright © 2012. Power Star Srinivasan - All Rights Reserved